ரேணிகுண்டா –திரை விமர்சனம்
ஜானி ஜெயிலில் அடைக்கப்பட அங்கே போலீஸ்காரர்களால் அடித்து, துவைக்கப்படுவதை பார்த்து அவனை காப்பாற்றும் நால்வர் படை, ஒரு கட்டத்தில் அவனை தங்களிடம் தஞ்சம் அடைந்த கோழியை அடை காப்பது போல நால்வ்ரும் காக்க, ஜெயிலில் அவர்களுக்கு பெயீலெடுக்க யாரும் வராததால், அவர்கள் ஜெயிலிருந்து தப்பிக்க, போகும் போது ஜானியையும் கூட்டி போகிறார்கள். போகிற வழியில் ஜானியின் குடும்பத்தை கொலை செய்த ரவுடி கருணாவை பட்டப்பகலில் நால்வரும் ஒரு மார்கெட் மத்தியில் போட்டு தள்ளிவிட்டு, பாம்பேக்கு ரயிலேற, வழியில் டி.டி.ஆரிட்ம் பிரச்சனை, ரேணிகுண்டாவீல் இறங்கல், பழைய ஜெயில் மேட்டிடம் அடைக்கலம், அங்கே ஜானுக்கும், லோக்கல் பெண்ணூக்குமான காதல், தமிழ்நாட்டு போலீஸ் துரத்தல், க்ளைமாக்ஸ்.
மற்ற மூவரில் டீம் ஹெட்டாய் வரூம் குண்டு பையன் நீஷாந்துக்கு பெரிதாய் வேலையில்லை என்றாலும், நினைவில் நிற்கிறார். மற்றவர்களும் அஃதே.
க்யூட்டான குட்டி ஹீரோயின், பல காட்சிகளில் அவரின் முகத்தில் தெரியும் இன்னொசென்ஸ், கண்களில் தெரியும் சோகம், உடல்மொழியில் தெரியும் குழந்தைத்தனம் எல்லாம் நம் மனதை கொள்ளை கொள்கிறது
நிஜமாகவே படத்தின் ஹீரோ ஒளிப்பதிவாளர் சக்திதான். படம் முழுவதும் இவரின் உழைப்பு வியாபித்திருக்கிறது. அதிலும் அந்த பொட்டை அத்துவான காட்டில், ஜானி இருவரை கொலை செய்யப்படும் காட்சியில் கேமரா இன்னொரு கேரக்டர் ஆகவே அலைகிறது. படத்தில் எடிட்டிங்கும் தன் பங்குக்கு இந்த காட்சியில் விளையாடியிருக்கிறது. கணேஷின் இசையில் ஏற்கனவே
ஒக்காளீ பாடல் ஹிட். பிண்ணனியிசையில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம். இயக்குனர் சிங்கம்புலியின் வசனங்கள் ஆங்காங்கே டப்பாவின் மூலமாய் நினைவில் நிற்கிறார். பாராட்டபட வேண்டிய இன்னொருவர் சண்டை காட்சிகளை அமைத்த ராஜ்குமார். அந்த கெடுக்கிபிடி முறை தூள்.
புது நடிகர்கள், புது டெக்னீஷியன்கள் என்று எல்லாரையும் புதுமுகங்களாய் வைத்து, ஒரு ஆக்ஷன் படத்தை கொடுப்பது என்பது சும்மா இல்லை. அதை திறம்படவே செய்திருக்கிறார். கதாநாயகியின் அக்கா கேரக்டருக்கான ஆர்டிஸ்ட் செலக்ஷன் அருமை. குறை என்று சொல்வதானால், காதல் காட்சிகளில் இன்னும் கொஞ்சம் விளையாடியிருக்கலாம். அது மேலும் இரண்டாவது பாதிக்கு மெருகேற்றியிருக்கும், அதே போல் புதுசாய் ஏதும் காட்சிகள் இல்லாதது குறையே. படத்தின் பல காட்சிகள் ஏற்கனவே பார்த்த காட்சிகளை போலவே இருப்பதால் அலுப்பூட்டவே செய்கிறது. டெம்ப்ளேட் காட்சிகளே படம் நெடுக வருவது திருப்பங்கள் இல்லாத திரைக்கதை என்று கொஞ்சம் மைனஸ்தான். அதே போல நடு நடுவே வரும் க்ளப் டான்ஸ் பாடல்கள், மதுரை ஜெயிலில் இருந்து தப்பிய பசங்கள் சாதாரணமாய் அலைவது, ஆந்திரா என்றால் அங்கே சட்டம் ஒழுங்கே இல்லை என்பது போன்ற ஒரு மாயையை உலவவிட்டிருப்பதை தவிர, நிச்சயம் பாராட்ட படவேண்டியவர் இயக்குனர். பன்னீர் செல்வம்.
டிஸ்கி: இந்த படத்திற்கு இவர்கள் செய்த மார்கெட்டிங் மிக அருமை. அந்த மார்கெட்டிங்தான் படத்திற்கான ஓப்பனிங்கை ஏற்படுத்தியது.
டிஸ்கி: இந்த படத்திற்கு இவர்கள் செய்த மார்கெட்டிங் மிக அருமை. அந்த மார்கெட்டிங்தான் படத்திற்கான ஓப்பனிங்கை ஏற்படுத்தியது.
ரேணிகுண்டா – Expectation drained…
No comments:
Post a Comment